விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் அறிவுரை
உடுமலை: உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, ஹிந்து இயக்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இது குறித்து உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில், ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், பொது இடங்களில் முறையாக அனுமதி பெற்ற பிறகே சிலைகள் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண் சிலைகள் மட்டுமே வைக்கவும், உரிய விதிமுறைகளை பின்பற்றி சிலைகள் அமைக்கவும் , விசர்ஜன ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று, அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும், உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.