உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் கிளப் முன்னாள் செயலாளர் மீது போலீசில் புகார்

திருப்பூர் கிளப் முன்னாள் செயலாளர் மீது போலீசில் புகார்

திருப்பூர்; திருப்பூர் கிளப் முன்னாள் செயலாளர் மீது, தற்போதைய நிர்வாகிகள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.திருப்பூர் கிளப் தலைவர் சுகுமார், செயலாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:அவிநாசி ரோட்டில் இயங்கும், திருப்பூர் கிளப்பில், பல்வேறு பொழுதுபோக்குகள், உரிய சட்ட அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மன்ற செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், முன்னாள் செயலாளர் செல்வம் செயல்பட்டுவருகிறார்.அவர் செயலாளராக பொறுப்பில் இருந்த போது, மன்றத்தின் 'பார்' பிரிவில், விதிகளுக்கு முரணாக நிலுவைத் தொகையை கையிருப்பில் வைத்திருந்தது; 'கார்டு ரூம்' அறையை பொலிவுபடுத்தியதில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் எழுந்ததால், அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டும் தராததால், தற்காலிக நீக்கம் செய்தோம்.இருப்பினும், அவர், கிளப் செயல்பாடுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, கடந்த, 12ம் தேதி அசாதாரண பொதுக்குழு கூட்டம் கூடி, அவரை, நிரந்தரமாக சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக்கினோம்.கிளப் செயல்பாடு தொடர்பாக அவரிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை, கார்த்திக் என்பவரின் துணையுடன், திரித்து பரப்பி, அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்வதால், அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி