உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் டைரி ரேஷன் அரிசி பறிமுதல்

போலீஸ் டைரி ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர் தெற்கு தாலுகா, பெருந்தொழுவு ரோடு, அருள் ஜோதி நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 மூட்டை ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் நடத்திய திடீர் சோதனையில், 950 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை