உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

நீரில் மூழ்கி தொழிலாளி பலிபொங்கலுாரை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 36; பனி யன் தொழிலாளி. நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 30 என்பவருடன் பல்லடத்தில் இருந்து டூவீலரில் பொங்கலுார் நோக்கி சென்றார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடப்பதால், ரோட்டில் இருந்த பள்ளத்தில் இருவரும் விழுந்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி ஆனந்தராஜ் அதே இடத்தில் இறந்தார். பல்லடம் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். அவருடன் பயணித்த பிரபு பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.சேவல் சண்டை: 6 பேர் கைதுநாதம் பாளையம் பஸ் ஸ்டாப் பின் புறம் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக அப்பகுதியினர் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், 33 உள்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு சேவல், 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கார் மோதி வாலிபர் மரணம்கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் கணேஷ்குமார், 19. டூவீலரில் ஊத்துக்குளி - திருப்பூர் ரோடு திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, கார் மோதி பலியானார்.மேற்கு வங்க வாலிபர் தற்கொலைமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் மண்டல், 36. திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நண்பரின் அறையில் இருந்த அவர் துாக்குமாட்டி இறந்தார்.மின் கம்பி உரசி லாரியில் தீகும்பகோணத்தில் இருந்து, 36 வைக்கோல் கட்டுகளை ஏற்றி கொண்டு, ஊதியூர் அருகே என்.காஞ்சிபுரம் நோக்கி லாரி நேற்று வந்தது. லாரியை கோபு, 47 ஓட்டி வந்தார். ஊதியூரில் உள்ள மனோஜ் என்பவரின் தோட்டத்துக்கு அருகே சென்ற போது, மின் கம்பியில் உரசி தீ பிடித்தது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். வைக்கோல் மட்டும் எரிந்தது. லாரி சேதமடைவது தவிர்க்கப்பட்டது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.தீவிபத்தில் காயமடைந்த சிறுமி பலிஇடுவாய், வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவா, 44. இவரது மனைவி மகாலட்சுமி, 36, மகள்கள் ஸ்ரீமதி, 13, கவுசல்யா, 11. கடந்த, 16ம் தேதி காலை வீட்டில் காஸ் தீர்ந்த நிலையில், மாற்று காஸ் சிலிண்டரை மாற்ற முயன்ற போது, காஸ் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தந்தை ஜீவா, மகள் கவுசல்யா ஆகியோர் தீக்காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா நேற்று பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி