உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் செய்திகள்: குட்கா பறிமுதல்

போலீஸ் செய்திகள்: குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல் திருப்பூர் வடக்கு போலீசார், குளத்துப்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். சந்தேகத்துக்கு இடமானவகையில் வந்த தீபக்குமார், 25, ரவிபட்டேல், 23 ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 659 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது; இருவரும் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி சிக்கியது திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் நகர் அருகே, சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக, திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில், டுண்டுன் சிங், 52 என்பவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார், அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மது பாட்டில் பறிமுதல்  திருப்பூர் ரூரல் போலீசார், நல்லுார் அருகே, காசிபாளையம் சிட்கோ பகுதியில், சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தினர். சாமிநாதன், 35 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  வீரபாண்டி போலீசார், அண்ணாநகர், இடுவம்பாளையம் அருகே டாஸ்மாக் பகுதியில் நடத்திய சோதனையில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மகேஷ்குமார், 73 என்பவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ