உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவனை தேடும் போலீசார்

சிறுவனை தேடும் போலீசார்

அவிநாசி; அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் கார்த்திகேயன், 14. கருவலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 14ம் தேதி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், அவிநாசி போலீசில் புகார் கொடுத்தனர். சிறுவன் குறித்து தகவல் தெரிந்தால், இன்ஸ்பெக்டர் - 8838346600, எஸ்.ஐ., - 9498178151 மற்றும் போலீஸ் ஸ்டேஷன் 9498101328 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ