உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

திருப்பூர்:தீபாவளி 'ஷாப்பிங்'குக்காக மக்கள் குவிகின்றனர்; குமரன் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரோடுகளில், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி, குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க 'மப்டி'யில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தை பயன்படுத்தி சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. மாநகரில் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க உள்ளனர். தொடர்ந்து, ரோந்து போலீசார் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர். நகரில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு செய்கின்றனர். ஒவ்வொரு சிக்னலிலும் போக்குவரத்து போலீசார் 'மைக்' மூலம் சாலை விதிகளை மதிக்க அறிவுறுத்துவதோடு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்களது உடமைகளை பாதுகாத்து விழிப்போடு இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை