உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொளுத்தும் வெயிலில் காயும் போலீசார்

கொளுத்தும் வெயிலில் காயும் போலீசார்

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோட்டில், சிறுபூலுவபட்டி ரிங் ரோடு உள்ளது. இந்த ரிங் ரோட்டில் மங்கலம் ரோட்டிலிருந்து வரும் ரோடு, நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே ரோட்டைக் கடந்து செல்கிறது. காலேஜ் ரோடு கடக்கும் இடத்தில் இந்த ரிங் ரோட்டின் உயர் மட்டப்பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்த இடத்தில் தற்போது வாகனப் போக்குவரத்து ஒரு புறத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வஞ்சிபாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், சற்று தள்ளி உள்ள ஒரு சிறிய ரோடு வழியாக, ரங்கநாதபுரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்காக, பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பேனரும் மாநகர போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர். இதுதவிர அதேயிடத்தில், வாகனங்களை திருப்பி விடும் வகையில் போக்குவரத்து போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், நிழற்குடை ஏதுமில்லை. இதனால், போலீசார் காலை முதல் மாலை வரை கொளுத்தும் வெயிலில், மிகுந்த சிரமத்துடன் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே, நிழலுக்கு தற்காலிகமாக ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ