உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கெங்கும் பாலிதீன் கவர்

எங்கெங்கும் பாலிதீன் கவர்

பொங்கலுாரில் மொத்த குப்பைகளும் பி.ஏ.பி., வாய்க்காலில் கொட்டப்படுகிறது. கொடுவாய் உள்ளிட்ட பிற ஊராட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு வாய்க்காலும் கிடைக்கவில்லை. குளம், குட்டை, நீர் நிலை புறம்போக்கு, வண்டித்தடம், ரோடு என திரும்பிய பக்கமெல்லாம் குப்பை குவிந்து கிடக்கிறது.பாலிதீன் கவர்களால் கால்நடை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது இறைச்சி கடை, மளிகை கடை காய்கறி கடைபழக்கடை, தள்ளுவண்டி கடை என எங்கு பார்த்தாலும் பாலிதீன் கவர்களில் தான் பொருட்கள் கொடுக்கப்படுகிறது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், விற்பனையை தடுக்க முழு வீச்சில் அதிகாரிகள் களமிறங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி