உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிதீன் கவர்கள் பறிமுதல்; மாநகராட்சி திடீர் சுறுசுறுப்பு

பாலிதீன் கவர்கள் பறிமுதல்; மாநகராட்சி திடீர் சுறுசுறுப்பு

திருப்பூர்; திருப்பூர் நகரப் பகுதி கடைகளில், விற்பனைக்கு வைத்திருந்த, தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை மாநகராட்சி சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர்.தமிழகம் முழுவதும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பைகள், டம்ளர், தட்டு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. இவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் இவற்றின் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியின் தொடர் கண்காணிப்பு உட்பட நடவடிக்கை காரணமாக இதன் பயன்பாடு சற்று கட்டுக்குள் இருந்தது. பல்வேறு காரணங்களால் தொடர்வு ஆய்வு போன்ற நடவடிக்கை சற்று குறைந்தது. இதையடுத்து இவற்றின் பயன்பாடு மீண்டும் தலை துாக்கியது. இது குறித்த புகார்களின் பேரில் நேற்று காலை, மாநகர நல அலுவலர் முருகானந்த் தலைமையில், சுகாதார பிரிவினர், அரிசிக்கடைவீதியில் 10 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.இதில், ஆறு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மொத்தம், 3 டன் எடையுள்ள பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் இது போன்ற திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை