உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை முதல் பொங்கல் பரிசு; டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

நாளை முதல் பொங்கல் பரிசு; டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

திருப்பூர்; ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் பணி நாளை முதல் துவங்கவுள்ளது. இதற்கான டோக்கன்கள் பெருமளவு கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி கார்டு வைத்துள்ள கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்வாசிகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அவ்வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகளுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கி அதனடிப்படையில் இப்பரிசு பொருள் வழங்கப்படவுள்ளது.ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பொருள் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் போன்றவற்றை தவிர்க்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி கடந்த, 3ம் தேதி முதல் ரேஷன் கடைவாரியாக, ஊழியர்கள் தங்கள் கடைக்கு உட்பட்ட கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒன்பது தாலுகாக்களில் மொத்தம், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.இவற்றில் 7,98,856 அரிசி கார்டுகளும், 324 இலங்கை முகாம்வாசிகள் கார்டுகள் என மொத்தம், 7,99,180 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு பொருள் வழங்கப்படவுள்ளது. வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி, நேற்று வரை ஏறத்தாழ 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. நாளை (9ம் தேதி) முதல் பொங்கல் பரிசு பொருள் வினியோகம் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை