உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பூர்; ''பொங்கல் பரிசு பொருள் வழங்கும் ரேஷன் கடைகளில் தேவையெனில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்'' என கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வரும் 9ம் தேதி முதல், முறையாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்க வேண்டும். பொருள் ெபறும் நாள், விவரம் இருக்க வேண்டும். முதல் நாள் காலை மற்றும் பிற்பகல் தலா 100 பேர்; 2வது நாள் முதல் காலை 150, பிற்பகல் 200 பேர் என பொருள் வழங்குவதோடு, அதன் விவரம் கடை முன் வைக்கப்பட வேண்டும்.மேலும் 1500 கார்டுக்கு மேல் உள்ள கடைகளுக்கு கூடுதல் ஊழியர் பெற்றுக் கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய இடங்கள், கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளுக்கு உரிய வகையில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்.அனைத்து கடைகளிலும் போதிய அளவு பொங்கல் பரிசுப் பொருட்கள் இருப்பில் இருப்பதையும், தரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.டோக்கன் வினியோகம் குறித்த தகவல் தினமும் மாலை 5:00 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும். எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் இப்பணிகள் செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், ''தமிழகத்தில் கடந்த காலங்களில் பொங்கல் பரிசு வழங்கும் போது பல்வேறு பிரச்னைகள் எழுந்தது. இதை தவிர்க்கும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை மாதம் முழுவதும், அனைத்து வேலை நாட்களிலும் வழங்கலாம் என்று அறிவிப்பு வைக்க அனுமதிக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை