மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
22-Oct-2025
அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் போலீஸ் அவுட்போஸ்ட் பகுதியில் இருந்து ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் வழியாக அவிநாசி செல்லும்பிரதான சாலை உள்ளது. இந்த ரோட்டில், நல்லாறு பாலத்தின் அருகிலும், ராக்கியாபாளையம் பஸ் ஸ்டாப்பிலும்,ரோடு சேதமாகி மிகப்பெரிய அளவில் ரோட்டின் நடுவில் அதல பாதாள குழிகள் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு சென்று வருவோர் என 500க்கும் மேற்பட்டோர், டூவீலரில் இரவு நேரத்தில் அதிகமாக இந்த பகுதியை கடக்கின்றனர். குறிப்பாக போதிய தெருவிளக்கு வசதி அமைக்கப்படாததால், இருள் சூழ்ந்து நடந்து மற்றும் டூ வீலர் போன்றவற்றில் வருபவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது, மழைக்காலம் துவங்கியுள்ளதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று, குழிகள் இருப்பது தெரியாமல் டூவீலரில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வகையில், கடந்த 15 நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதியினர் கூறுகின்றனர். உடனடியாக ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் உள்ள குழிகளை மூடவும், பழுதான ரோட்டை முழுவதுமாக தரத்துடன் அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர்உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
22-Oct-2025