உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமத்தில் 2 நாட்களாக மின்தடை; விவசாயிகள், மக்கள் பாதிப்பு

கிராமத்தில் 2 நாட்களாக மின்தடை; விவசாயிகள், மக்கள் பாதிப்பு

உடுமலை; உடுமலை எலையமுத்துார் பகுதியில், இரு நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், விவசாயிகள் பாதித்துள்ளனர்.உடுமலை மின் பகிர்மான வட்டம், எலையமுத்துார், ஜக்கம்பாளையம், கிளுவன்காட்டூர், குட்டியகவுண்டனுார், பார்த்தசாரதிபுரம், ஆண்டியகவுண்டனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பல ஆயிரக்கணக்கான வீடு, விவசாய மின் இணைப்புகள் மற்றும் கோழிப்பண்ணைகள், தொழிற்சாலைகள் உள்ளன.நேற்றுமுன்தினம் பலத்த காற்று, இடிமின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, இக்கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, இரண்டு நாட்களாக மின் வினியோகம் இல்லாததால், பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்த போது, கடந்த, 4ம் தேதி மதியம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, மின் வினியோகம் சீரமைக்கப்படவில்லை. ஒரு சில கிராமங்களுக்கு மட்டும், குறைந்த நேரம் மின்சாரம் வருகிறது.ஜக்கம்பாளையம் கிராமத்திற்கு, இதுவரை மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், கிராம மக்கள் இருட்டில் தவித்து வருவதோடு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வைக்க, மோட்டார்களை இயக்க முடியாத நிலை உள்ளது.இப்பகுதியில், அதிகளவு கறிக்கோழி மற்றும் தாய்க்கோழி பண்ணைகள் உள்ள நிலையில், அவற்றுக்கு நீர் வழங்க முடியாமல், கோழிப்பண்ணையாளர்ககள் அவதிப்பட்டு வருகின்றனர். தொழிற்சாலை மற்றும் விவசாய மின் மோட்டார்களையும் இயக்க முடியவில்லை.மின் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநில அளவிலான மின்னகம் ஆகியவற்றுக்கு புகார் தெரிவித்தும், முழுமையான மின் வினியோகம் இல்லாததால், கடுமையாக பாதித்து வருகிறோம். மின் வாரிய அதிகாரிகள் மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை