மேலும் செய்திகள்
தேவகோட்டையில் பிரதோஷ வழிபாடு
01-Oct-2024
திருப்பூர் : நேற்று புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.அவ்வகையில், திருப்பூர், ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில், அதிகார நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து விஸ்வேஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியன நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில், உமா மகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில்.லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், சித்தம்பலம் நவக்கிரக கோட்டை சிவன் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
01-Oct-2024