நாளை ரேக்ளா பந்தயம் ஏற்பாடுகள் மும்முரம்
காங்கயம்; காங்கயம், சிவன்மலை பகுதியில் நாளை ரேக்ளா பந்தயம் நாளை நடைபெறவுள்ளது.காங்கயம் அடுத்த சிவன்மலையில், இந்தநிகழ்ச்சி, நாளை (13ம் தேதி) காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். சிவன்மலையை சுற்றி கிரிவலப்பாதையில் இப்பந்தயம் நடைபெற உள்ளது. இதில் 200 மீ., மற்றும் 300 மீ., தொலைவுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. ரேக்ளா பந்தயம் நடப்பதையொட்டி, இதன் துவக்கமாக, நேற்று மலையடிவாரத்தில் பந்தயம் துவங்கும் இடத்தில், கால்கோள் விழா நடந்தது.நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். பொதுமக்கள் மற்றும் ரேக்ளா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.