மேலும் செய்திகள்
பிரதமர் பிறந்த நாள்; பா.ஜ.,வினர் ஆலோசனை
09-Sep-2025
திருப்பூர்; பிரதமர் மோடியின், 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் சரண் மருத்துவமனை, ரோட்டரி ஐ.எம்.ஏ., இணைந்து பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் ரத்த தானம் முகாம் நடந்தது. தொடர்ந்து, உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு நடந்தது. உறுப்பு தானத்துக்காக, நுாறு பேர் பதிவு செய்து கொண்டனர். 75 நபர்கள் ரத்தம் வழங்கினர். மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் அருண் மற்றும் வினோத் வெங்கடேஷ், பொருளாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். கருவம்பாளையம் மண்டலம் சார்பில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. மண்டல தலைவர் சங்கர், பொது செயலாளர் வினு பிரதீப், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர். l பொங்கலுார் ஒன்றிய பா.ஜ., சார்பில், ஆலாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, இனிப்பு வழங்கப்பட்டது. கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் வடிவேல், மண்டல பொதுச் செயலாளர் பொன்னுசாமி, மண்டல துணைத் தலைவர் முத்துசாமி, கண்டியன் கோவில் சக்தி கேந்திர பொறுப்பாளர் கனக ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். l அவிநாசி நகர பா.ஜ., சார்பில் லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதமர் மோடி பெயருக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நகரத் தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார். நகர பொதுச்செயலாளர் நந்தகுமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் சண்முகம், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்துரு, முன்னாள் நகர தலைவர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். l அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில், வி.எம். திருமண மஹாலில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் ஆகியன ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் சுந்தரன் துவக்கி வைத்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் யுவராஜ் கண்ணன், பெரியசாமி, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜசேகரன், சதீஷ், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் வக்கீல் பிரபு, கார்த்திக், ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார் பங்கேற்றனர். திருமுருகன்பூண்டி சுகன் சுகா மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மருத்துவ முகாமில் பலர் பயன்பெற்றனர். l திருமுருகன்பூண்டி நகர பா.ஜ., தலைவர் சண்முகபாபு தலைமையில், பொதுச் செயலாளர்கள் சதாசிவம், சிவகுமார், நகர பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
09-Sep-2025