உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பிரதமர் பிறந்த நாள் விழா: பெண்கள் கபடி போட்டி

 பிரதமர் பிறந்த நாள் விழா: பெண்கள் கபடி போட்டி

அனுப்பர்பாளையம்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட நெருப்பெரிச்சல் மண்டல பா.ஜ. சார்பில், மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி பாண்டியன் நகரில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 45 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில், வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரத்து 75 ரூபாய், இரண்டாம் பரிசாக 20 ஆயிரத்து 75 ரூபாய், மூன்று மற்றும் நான்காம் பரிசாக 15 ஆயிரத்து 75 ரூபாய் மற்றும் அனைத்து பரிசுகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது. முன்னதாக போட்டியை மாவட்ட தலைவர் சீனிவாசன், தொடங்கி வைத்தார். மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், நெருப்பெரிச்சல் பகுதி மண்டல தலைவர் உதயகுமார், பொது செயலாளர்கள் கார்த்திகேயன், தினேஷ்குமார், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி