உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளருக்கு சிக்கல்?

100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளருக்கு சிக்கல்?

பல்லடம்; கிராம ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தினசரி 150 பேரையாவது பணிக்கு அழைத்து வர வேண்டும் என, பணித்தள பொறுப்பாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணித்தள பொறுப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'நுாறு நாள் வேலைக்கு வர விரும்பும் தொழிலாளர்கள்தான் இப்பணிக்கு வருவார்கள். இவ்வகையில், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில், நுாறு நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க இயலாது. இதன்படி, 100 நாட்கள் பணிகள் நிறைவடைந்த ஒரு கிராமத்தில், மீண்டும், குறைந்தபட்சம் தினசரி, 150 பேரையாவது வேலைக்கு அழைத்து வர வேண்டும் என்கின்றனர். இதற்காக, வீடு வீடாக சென்று ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆட்களே கிடைக்காத சூழலிலும், 150 பேரை கட்டாயம் கணக்கில் கொண்டுவர வேண்டும் என, அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். இது எதற்காக என்பது தெரியவில்லை. திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது நாங்கள்தான் பலிகடா ஆக்கப்படுவோம் என்ற அச்சம் உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை