உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொத்து வரி; பொதுமக்களுக்கு பாதிப்பு

சொத்து வரி; பொதுமக்களுக்கு பாதிப்பு

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம், தலைவர் குமார் தலைமையில் நடந்தது. ஆணையர் பால்ராஜ், துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:பாரதி(தி.மு.க.,): கவுன்சிலர்கள் கோரிக்கைக்காக கொடுக்கும் மனுக்கள் நகராட்சியில் பதிவு செய்த பின்பு முறைகேடாக வெளி ஆட்களுக்கு தரப்படுகிறது. நகராட்சி முத்திரையுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டும்.ராஜன் (தி.மு.க.,): எட்டாவது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.முருகசாமி (தி.மு.க.,): - ஏழாவது வார்டுக்குட்பட்ட பகுதியில் போர்வெல் புதிதாக போட்டுத் தர வேண்டும். உயர் கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும்.கார்த்திகேயன் (அ.தி.மு.க.,)-: 4வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மெயின் ரோட்டில் உயர் கோபுர விளக்கு தேவை. நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.காயத்ரி (அ.தி.மு.க.,): - மூன்றாவது வார்டு பகுதியில் சாக்கடையில் தேங்கும் கழிவு நீரை அகற்றிட பணியாட்கள் முறையாக வருவதில்லை.கடந்த வாரங்களில் பெய்த கன மழை காரணத்தால் கிழக்கால தோட்டத்தில் மழை நீரில் தண்ணீரும் சேர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டது.

மா.கம்யூ., வெளிநடப்பு

சுப்பிரமணியம் (மா.கம்யூ.,)ஏற்கனவே நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு சொத்து வரி குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டது.தற்போது மீண்டும் வருடத்திற்கு ஒருமுறை 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்துவது என அரசின் முடிவு பொதுமக்களை மிகவும் பாதிக்கும்.சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.நகராட்சி தலைவர்: தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.தேவராஜன் (மா.கம்யூ.,: - சொத்து வரியை கட்ட தவறினால் அபராதம் விதிப்பது கண்டனத்துக்குரிய செயல். எதிர்த்து தீர்மானம் போட வேண்டும். (தேவராஜனும், சுப்ரமணியனும் மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி