ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது
திருப்பூர்; தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ் அனுமதியின்றி, புது பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்; கண்டன கோஷம் எழுப்பினர்.அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், மாநில இளைஞரணி தலைவர் வல்லபை பாலா, மாநில தகவல் தொடர்பு செயலாளர் சதீஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குருஜி சக்திவேல் உட்பட, 100க்கும் அதிகமான நிர்வாகிகளை, போலீசார் கைது செய்தனர்.