உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்வழிப் பாதையை மறித்து குப்பை கொட்ட எதிர்ப்பு

நீர்வழிப் பாதையை மறித்து குப்பை கொட்ட எதிர்ப்பு

பொங்கலுார்; தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, குப்பை மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டது. கொடுவாயில் திரும்பிய பக்கம் எல்லாம் குப்பை மயமாக காட்சியளிக்கிறது. கொடுவாயில் சேகரமாகும் குப்பைகளில் பெரும் பகுதி கொடுவாய் அருகே நாகலிங்கபுரம் வழியாக செல்லும் ஓடையில் கொட்டப்படுகிறது. நாகலிங்கபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் நிழலி கரையை அடைகிறது. நிழலிக்கரை வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை அணைக்குச் சென்று அங்கிருந்து அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடையில் தான் பல்வேறு கழிவுகளை கொட்டி நீர்வழிப் பாதையை சீர்கெடுக்கின்றனர். மழைக்காலத்தில் குளம் நிரம்பி பெரு வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஓடை வழியாக செல்ல வேண்டும். ஓடையை மறித்து குப்பைகளை கொட்டி விட்டால் தண்ணீர் எங்கே செல்லும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை