உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நில மோசடிக்கு எதிராக போராட்டம்; விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை

நில மோசடிக்கு எதிராக போராட்டம்; விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், அவிநாசி வள்ளிபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து, பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள, 2.97 ஏக்கர் நிலத்தை, குன்னத்துார் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டனர். இதை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட பதிவாளர் தலைமையில் பேச்சு நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.நேற்று விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்றனர். அங்கு பதிவாளர் ஜெய்பிரகாஷ் தலைமையில் பேச்சு நடந்தது.அதில், ''மோசடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரயம் பெற்ற, ஏழு பேரின் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தனர். மனுவும் அளித்தனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் தற்போது விசாரணை நடந்துள்ளது. எதிர் தரப்பில் விசாரணை செய்த பின்னர் விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ