மேலும் செய்திகள்
மா.கம்யூ., மாவட்ட மாநாடு
02-Dec-2024
மா.கம்யூ., கட்சியின் திருப்பூர் மாநகர பெரியார் காலனி கிளை சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் ஜார்ஜ் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர்கள் சுகுமார், பாபு ஆகியோர் பேசினர்.திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டலம், 14வது வார்டு, பெரியார் காலனி பகுதி குழந்தைகள் பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது. அங்கிருந்து, அருகில் உள்ள சில வீடுகளுக்குள் பாம்புகள் நுழைகின்றன. அப்பகுதி மக்கள் அச்சம் அடைகின்றனர். பூங்காவை பராமரிக்க வேண்டும். குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
02-Dec-2024