உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டம்

உடுமலை; விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை, பெதப்பம்பட்டியிலுள்ள, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நுாறு நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கவும், இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு முழுமையாக ஒதுக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்ட முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கவும், விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, மாதர் சங்க செயலாளர் பாப்பாத்தி, விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரராஜ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ஆறுச்சாமி, பாட்டான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை