உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் வழங்கல்

திருப்பூர்:சக் ஷம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால் உள்ளிட்ட நல உதவி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு, பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில், கடந்த மாதம், சிறப்பு முகாம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. அதன்படி, 15 மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று, 1.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. சாமிநாதபுரம் சேரன் ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அந்நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், சக் ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம், பழனிசாமி - பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ஸ்ரீதேவி மற்றும் லோகேஸ்வர் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை அவயங்கள், 'காலிபர்' ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில், சக் ஷம் மாநில இணை பொருளாளர் கண்ணன், லகு உத்யோக் பாரதி மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, திருப்பூர் கிழக்கு ரோட்டரி தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை