உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குட்கா விற்பனை ஜோர் நல்லுார் பொதுமக்கள் புகார்

 குட்கா விற்பனை ஜோர் நல்லுார் பொதுமக்கள் புகார்

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு நல்லுாரில் புகையிலை, சிகரெட், பீடி, தடைசெய்யப்பட்ட பான்மசாலா போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. திருப்பூரில் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்தாலும், நகருக்கு வெளிப்பகுதிகளில் சோதனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. போலீஸ் செக்போஸ்ட்க்கு அருகில் உள்ள கடைகளில் விற்பனை நடந்த வண்ணமே இருக்கின்றன. போலீசார் எதையும் கண்டு கொள்வதில்லை. பான்மசாலா ஆகியன விற்கும் கடைக்காரர்மீது கடும் அபராதம் விதித்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி