உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிபாட்டுத்தலம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

வழிபாட்டுத்தலம் அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

பல்லடம்: குடியிருப்பு பகுதியில் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், பல்லடம் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அறிவொளி நகர், குருவாயூரப்பன் நகரை சேர்ந்த பொதுமக்கள்கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். மாற்று மதத்தை சேர்ந்த சிலர், குடியிருப்புகளுக்கு இடையே, எந்தவித அனுமதியும் இன்றி வழிபாட்டுத்தலம் கட்டி நாளை மறுநாள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே இப்பகுதியில் நான்கைந்து வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அனைத்து மதத்தினருடன் இணக்கமாக ெசல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்று மதத்தை சேர்ந்த சிலர், வேண்டுமென்றே, எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கோவில் விழாக்களின் போது, அவர்களது வழிபாட்டுத்தலங்களை கடந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கின்றனர். கடந்த முறை நடந்த கோவில் ஆண்டு விழாவின்போது, ஒன்றரை மணி நேரம் எங்களை காத்திருக்க வைத்தனர். விழாவின் போது மட்டும் தான் நாங்கள், மைக் செட் பயன்படுத்துகிறோம். அவர்கள், அன்றாடம் அதிக சத்தத்துடன் மைக் செட் வைத்து வேண்டுமென்றே இடையூறு செய்கின்றனர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் எங்களால் அங்கு குடியிருக்க முடியாது. எங்களுக்கு வேறு இடத்தில் எங்காவது வீடு கட்டி கொடுத்தால், அங்கு குடிபெயர்ந்து கொள்கிறோம். எங்கள் பிரச்னைகளை கூறினால், கோர்ட் மூலம் சந்தித்துக் கொள்ளுமாறு போலீசார் கூறுகின்றனர். மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலம் அமைந்தால், நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் வழிபாட்டுத்தலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தாசில்தார் சபரி, ''கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை