உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் இயக்கம் சார்பில் மாணவருக்கு வினாடி - வினா

அறிவியல் இயக்கம் சார்பில் மாணவருக்கு வினாடி - வினா

பல்லடம்; அறிவியல் இயக்கம் சார்பில், மேற்கு பல்லடம் அரசு பள்ளியில், மாணவரிடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் நோக்கில், மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தனியார் பள்ளி மாணவரிடையே, வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்லடம் வட்டார அரசு தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, வினாடி -- - வினா போட்டி, மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப்பள்ளியில் துவங்கியது. அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமையில் நடந்த வினாடி -- - வினா போட்டிக்கு, 20க்கும் மேற்பட்ட அரசு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 50 மாணவ, மாணவியர் குழுவினர் பங்கேற்றனர். அறிவியல், கணிதம், சமூக அறிவியல், வானவியல் மற்றும் விளையாட்டு ஆகிய பாடங்கள் சார்ந்து மாணவ, மாணவியரிடையே கேள்விகள் கேட்கப்பட்டன. பள்ளிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் குழுவினர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் குழுவினர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !