ரயில்வே கேட் இன்று மூடல்
திருப்பூர் - ஊத்துக்குளி ரயில் வழித்தடத்தில் முதல் ரயில்வே கேட் தண்டவாளம், சிலாப் கற்கள் சீரமைப்பு பணி கடந்த 27ம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று கேட்டுத்தோட்டம் பகுதியில் தண்டவாளம், கேட், சிக்னல், சீரமைப்பு பணி நடக்கிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கேட் மூடப்படும். இந்த கேட் வழியாக, பாரப்பாளையம் - தொட்டிய மண்ணரை வழித்தடத்தை கடக்கும் வாகனங்கள் இந்த நேரத்தில், மாற்றுப்பாதையில் செல்ல ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.