உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

 பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூரில், ரயில்வே ஸ்டேஷனில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் பயணங்களின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணியர் போல் நடித்து சிலர் கைவரிசை காட்டுவது, டிக்கெட் கவுன்டர்களில் கவனத்தை திசை திருப்பி குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பயணிகளை தற்காத்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில்வே போலீசார் சார்பில், ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட் பார்ம்மில் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் ருவந்திகா தலைமையிலான போலீசார், பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும், தெரியாத நபர்களிடம் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிட கூடாது, குழந்தைகளை கவனமாக உடன் வைத்து கொள்ள வேண்டும், பெண் பயணிகளுக்கு இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், 1512, 139 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி