மேலும் செய்திகள்
இடமலைகுடி ஊராட்சியில் ரேஷன் வினியோகம் துவங்கியது
03-Dec-2024
பல்லடம்; -பல்லடம் அருகே குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், ரேஷன் கார்டுகள், பைல்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை பரவலாக கிடந்தன.அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், மாவட்ட பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா உள்ளிட்டோர் அங்கு சென்று, 290 ரேஷன் கார்டுகள், பைல்கள் மற்றும் உப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்டவை, திருப்பூர் தெற்கு, உடுமலை கடத்துார், கணியூர், ஊதியூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு முகவரிகளுடன் கூடிய ரேஷன் கார்டுகள்.இவை காலாவதியானவையா, புதிதாக அச்சிடப்பட்டவையா, அலட்சியத்துடன் வீசப்பட்டதா என்று வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
03-Dec-2024