உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்; மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர், பல்லடம் ரோடு கணபதிபாளையம், பெரியதோட்டம் பகுதியை கண்காணித்தனர். நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விமல்ராஜ், 23 என்பவரிடம் விசாரித்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த, 1.6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சிங்கனுார், பெத்தாம்பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அரிசி மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ