உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; ெஹச்.எம்., மீது விசாரணை

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; ெஹச்.எம்., மீது விசாரணை

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, திருப்பூர் செரங் காடு அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்துசத்துணவுக்காக வழங்கப்பட்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் சென்றது.இதுதொடர்பாக போலீசார் கண்காணித்தனர். காங்கயம் கிராஸ் ரோட்டை சேர்ந்த இக்பால், 45 என்பவர், பள்ளிக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மாவு அரைத்து விற்பனை செய்ய பயன்படுத்தி வருவது தெரிந்தது.கரட்டாங்காடு உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்று ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி வந்து பயன்படுத்தியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 210 கிலோவை பறிமுதல் செய்தனர்.மேலும் சத்துணவு பணியாளர் சுமதி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை