உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விவசாய தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

 விவசாய தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

உடுமலை: உடுமலை ஒன்றியத்தில், வீட்டுமனை கோரி மனு கொடுத்த விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உடுமலையில் விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய கமிட்டி மாநாடு நடந்தது. அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் உடுமலை ஒன்றிய கமிட்டி, 11வது மாநாடு எரிசினம்பட்டியில் நடந்தது. ஒன்றியத்தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். சக்திவேல் வரவேற்றார். காளிமுத்து, வஞ்சிமுத்து, இமான் சுந்தரம், செந்தில்குமார், வனிதா, மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் கனகராஜ், விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி உரையாற்றினார். மாநில பொருளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றும் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ஒரு லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். உடுமலை ஒன்றியத்தில், வீட்டுமனை கோரி மனு கொடுத்த விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உடுமலை ஒன்றியம் முழுவதும், சட்டவிரோதமாக அதிகாலை முதல் மது விற்பனை நடந்து வருவதை, தடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை