உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை

போக்குவரத்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை

உடுமலை; உடுமலை, திருப்பூர் ரோடு பிரிவில், நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. இதில், உடுமலை - திருப்பூர் ரோடு பிரிவில், சிக்னல் இருப்பினும், பிரிவின் அருகே இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக கடந்து செல்கின்றன.வாகன ஓட்டுனர்கள், பல நேரங்களில் மற்ற வாகனங்களை கவனிக்காமல் ரோட்டை கடக்க முயற்சி செய்து, விபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்துகின்றனர்.மேலும், சிக்னலில் நிற்காமல் செல்ல நினைத்து, பிரிவில் வரும் வாகனத்தையும் பொருட்படுத்தாமல் அதிவிரைவாக செல்கின்றனர்.சரக்கு வாகனங்கள் வரும்போது, மற்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் சிறுசிறு விபத்துகளும் நிகழ்கிறது.எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்து ஏற்படாமல் இருக்கவும், திருப்பூர் ரோடு பிரிவில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடுமலை நகர பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி