உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு காப்பு

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு காப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ராக்கியாபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; டிரைவர். இவரது மனைவி அஜிதா, 30; பனியன் தொழிலாளி. தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தீபாவளியின் போது, சமாதானமாகி தம்பதி மீண்டும் சேர்ந்தனர். நேற்று நீண்ட நேரமாக அஜிதா, வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தார். அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்குள் பார்த்து போது, அவர் இறந்து கிடந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர். மணிகண்டனும், இரு குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பதும், அஜிதாவின் கழுத்தை நெரித்து கொன்று, மணிகண்டன் தப்பியதும் தெரியவந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், மனைவியை மணிகண்டன் கொலை செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை