உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடியிருப்போர் சங்க கூட்டம்

குடியிருப்போர் சங்க கூட்டம்

திருப்பூர்; திருப்பூர், திருக்குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராம்குமார், தலைமை வகித்து பேசுகையில், ''நகர்ப்புற வாழ்வாதார மேம்பாடு வாரிய குடியிருப்புகளில் செயல்படும் சங்கங்களில், இச்சங்கம் சிறப்புற செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து சங்கத்தின் வாயிலாக, பல்வேறு மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். சங்க செயலாளர் பழனிகுமார், ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அருளானந்தம், வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில், சங்க துணைத் தலைவர் பழனிசாமி, துணை செயலர் ராமர், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !