உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளம் குன்றா வளர்ச்சி; திருப்பூர் முன்னோடி

வளம் குன்றா வளர்ச்சி; திருப்பூர் முன்னோடி

திருப்பூர்: ''வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், திருப்பூர் கிளஸ்டர் முன்னோடியாக உயர்ந்துள்ளது,'' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சுதிர் சேக்ரி பேசினார்.ஏ.இ.பி.சி., தலைவராக, சுதிர் சேக்ரி பொறுப்பேற்றுள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், புதிய தலைவருக்கு பாராட்டு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது.சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தலைவரை வரவேற்று பேசினர்.ஏ.இ.பி.சி., பொதுசெயலாளர் மிதிலேஷ் தாக்கூர், முன்னாள் தலைவர் வீரேந்திர உப்பல் உள் ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.போட்டியை சமாளிக்கும் திறன் மேம்பாடு, ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டில், சுதிர் சேக்ரி முக்கிய பணியாற்றியுள்ளார். பொறுப்பேற்ற பிறகு, ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி, 17 சதவீதத்தில் இருந்து, 38 சதவீதமாக உயர்ந்துள்ளதுதாக, ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் பாராட்டினர். 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.சுதிர் சேக்ரி பேசுகையில், ''திருப்பூர் கிளஸ்டர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தியில் முன்னோடியாக உயர்ந்துள்ளது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கிளஸ்டர், பசுமை சார் உற்பத்தியில் முன்னேறியுள்ளது பெருமையாக இருக்கிறது. நாட்டில் உள்ள பிற கிளஸ்டர்கள், திருப்பூர் கிளஸ்டரை பின்பற்ற முயற்சித்தாலும், திருப்பூருக்கு இணையாக உயரவில்லை. திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு, 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி