உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு

ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு

அவிநாசி : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அவிநாசி கிளை ஆலோசனைக்கூட்டம், அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
ஜூன் 22, 2025 05:36

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் வருவாய் துறை செயலற்ற நிலை. மாபியா கும்பல் கட்டுபாட்டில் உள்ளது


முக்கிய வீடியோ