உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பு அகற்றாமல்சாலை அமைக்கும் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆக்கிரமிப்பு அகற்றாமல்சாலை அமைக்கும் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, புது ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளதால் புதிய ரோடு அமைக்கும் பணி தாமதமாகிறது என புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி, 60 வது வார்டு, தாராபுரம் ரோட்டில் புது ரோடு பகுதி அமைந்துள்ளது. டி.என்.கே. வித்யாலயா பள்ளியிலிருந்து ஜி.என். கார்டன் பகுதிக்கு செல்ல பொது வழி உள்ளது. இந்த ரோட்டில், மாநகராட்சி சார்பில் தார் ரோடு அமைக்க பணி துவங்கப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'மாநகராட்சிக்கு சொந்தமான பொது வழி உள்ளது. அதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புள்ளது. இதனை அகற்றினால் மட்டுமே ரோடு போட முடியும். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனமாக உள்ளனர். இதனால், ரோட்டுக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது,' என்றனர். வார்டு கவுன்சிலர் கோமதி கூறுகையில், ''ரோடு போடும் பணிக்காக நிலம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலமாக உள்ளதாலும், பணி ஒப்பந்தாரர் வேறு இடங்களில் மேற்கொண்டுள்ள பணி நிறைவடையவுள்ளதால், அதனை முடித்து விட்டு பணியை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை