உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தம்பதியாக நடித்து திருடியவர்கள் கைது

தம்பதியாக நடித்து திருடியவர்கள் கைது

அவிநாசி: அவிநாசியில், ரங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும், அபிராமி கார்டன் பகுதியில் ஒரு வீட்டிலும் வீடு புகுந்து திருடிய வழக்கில் அவிநாசி போலீசார் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதில், பழைய திருட்டு வழக்கில் தொடர்புடைய மதுரை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும், திவாகர், 38, நித்யரூபி, 36, ஆகிய இருவரும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர் தேடுதல் வேட்டையில், தெக்கலுார் பகுதியில் தங்களை தம்பதி என பொய் சொல்லி வீடு எடுத்து தங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 2 சவரன் நகை, லேப்டாப் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருடப் பயன்படுத்திய டூவீலர், சுத்தியல், கடப்பாரை உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை போலீசார், அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். இருவரும் இலங்கை அகதிகள் என்பதால், சென்னை புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ