உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.பி., மஹால் திறப்பு விழா கோலாகலம்!

ஆர்.பி., மஹால் திறப்பு விழா கோலாகலம்!

திருப்பூர்; திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில், 'டாலர் அப்பேரல்ஸ்' குழுமத்தின் சார்பில்,ஆர்.பி., மஹால் எனும் புதிய திருமண மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது.'டாலர் அப்பேரல்ஸ்' குழுமத்தின் அங்கமான, திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தைப்பேட்டை -எதிரில் உள்ள 'டாலர் காம்ப்ளக்ஸ்' அருகில், ஆர்.பி., மஹால் எனும் புதிய திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.பரணி நிட்டிங் நிறுவனர் கருப்பசாமி கவுண்டர் திறந்து வைத்தார். இவ்விழாவில்,எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், விஜயகுமார், ஆனந்தன், மேயர் தினேஷ்குமார், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா -சுப்பிரமணியன், 'மணி அப்பேரல்ஸ்' நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன், 'ஈஸ்ட்மேன் குளோபல் கிளாத்திங்' தலைவர் சந்திரன்,சக்தி 'இன்ப்ரா டெக்ஸ்' நிர்வாக இயக்குநர்சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.'டாலர் அப்பேரல்ஸ்' குழும நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி, ஹரி சஷ்டிவேல் மற்றும் குடும்பத்தார் வரவேற்றனர். நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தியின் தாயார் லட்சுமியம்மாள், இயக்குனர் வாசுகி ராமமூர்த்தி, புனிதவதி சக்திவேல், டாக்டர் மதுமிதா ஹரிசஷ்டிவேல் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.திருமண மண்டபம் குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:ஆர்.பி., மஹால் திருமண மண்டபம், திருப்பூர் மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருப்பூர் பல்லடம் ரோடு சந்தைப்பேட்டை எதிரில் அமைந்துள்ளது. மண்டபத்தின் முன்பாக விநாயகர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 400 பேர்களுக்கு மேல் அமரலாம். 120 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில், 'டைனிங் ஹால்', 150 பேர் உணவருந்தும் வகையில், 'பபே ஹால்', நவீன சமையல்கூடம், 100 கார்களுக்கு மேல் பார்க்கிங் செய்யும் வகையில் இடவசதி -உள்ளது.அனைத்து சுப நிகழ்ச்சிகள் நடத்த, மண்டபம் 'புக்கிங்' செய்ய, 99422 35599 (மேலாளர்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !