மேலும் செய்திகள்
முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணி நியமனம்
10-Apr-2025
திருப்பூர்: சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் கோவை மண்டலக் கூட்டம், திருப்பூரில் நடந்தது.பாலசுப்ரமணியம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினரும், ஸ்ரீகுருசர்வா சி.ஏ., அகாடமி நிறுவனருமான அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில தலைவர் அருள்மொழி சிவம் பங்கேற்றார். பார்ச்சூன் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் பேசினார்.சிறப்பு விருந்தினர்களாக ஆண்டவர் ராமசாமி, நொய்யல் மின் மயானத்தின் சேர்மன் இளங்கோ, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படிப்பு உதவித்தொகையாக மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.சமூக சேவை, சாதனை படைத்தோர் 10 பேருக்கு பாராட்டு, கேடயம் வழங்கப்பட்டது. முத்து வேலா யுதம் நன்றி கூறினார்.
10-Apr-2025