மேலும் செய்திகள்
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
29-Oct-2025
உடுமலை: அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக, ஊரக பகுதி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில், 50 பேர், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான தேர்வு நவ., 29ல் நடக்கிறது. www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், நவ. 4 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
29-Oct-2025