சகோதயா சதுரங்கம் யுவபாரதி சாம்பியன்
திருப்பூர்;'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில் நடந்த சகோதயா சதுரங்க போட்டியில், கோவையை சேர்ந்த யுவபாரதி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. திருப்பூர் அருகேயுள்ள அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளி சார்பில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 20 பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வயது வாரியாக ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. கோவையைச் சேர்ந்த யுவபாரதி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற அனைவருக்கும் கோப்பைகளும், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.