மேலும் செய்திகள்
'கிராவல்' கடத்திய லாரி பறிமுதல்
24-Sep-2025
காங்கயம்: காங்கயம் - கரூர் ரோடு, பகவதிபாளையம் பிரிவு பகுதியில் திருப்பூர் மாவட்ட கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு லாரியில், 8.5 யூனிட் எம் சாண்ட் இருந்தது. ஆனால், அதற்கான எந்த ஆவணங்களும் வாகனத்தில் இல்லை. இதனால், மணல் லோடுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று நிறுத்தினர். இது குறித்து காங்கயம் போலீசார் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
24-Sep-2025