சானிட்டரி நாப்கின் இயந்திரம் பழுது
உடுமலை : அரசு பள்ளிகளில் மாணவியர் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. மாணவியர் பயன்படுத்திய நாப்கின்களை, இயந்திரத்தின் ஒரு பெட்டிக்குள் போட்டதும், முழுவதும் எரிந்துவிடும்.உடுமலை சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில், இந்த இயந்திரம் தற்போது பயன்பாட்டில் இல்லை. பல பள்ளிகளில் இவை இருந்தும், பள்ளி நிர்வாகத்தினர் பயன்படுத்தாமல் உள்ளனர். பெரும்பான்மையான பள்ளிகளில் இயந்திரம் பழுதாகி உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளிகளில் தன் சுத்தம், சுற்றுபுற சுகாதாரம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் பலரும் திறந்த வெளியில் பயன்படுத்திய நாப்கின்களை வீசுகின்றனர். அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கு, வழங்கப்பட்ட இயந்திரத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்றனர்.