உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர் தேவாரப் பண்ணிசை

சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர் தேவாரப் பண்ணிசை

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஈஷாவின் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.பேரூர் ஆதீனத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேவாரம் அருளிய நாயன்மார்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தேவாரம் குறித்த விழிப்புணர்வை பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக கோவை ஈஷா யோகா மையத்தின் சம்ஸ்கிருதி மாணவர்கள் தமிழகத்தில் உள்ள, 15க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள், நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஈஷா மைய பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார், செந்தில்நாதன் மற்றும் அவிநாசி பகுதி தொண்டர்கள் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !