மேலும் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி; பள்ளிகளில் கோலாகலம்
15-Aug-2025
உடுமலை, ; உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 'கிராண்டுயூர் 2025-2026', பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி மாணவி அனுமித்ரா வரவேற்றார். பள்ளி தாளாளர் விக்னேஷ் ரங்கநதான் தலைமை வகித்தார். இயக்குனர் தீபா, பள்ளி முதல்வர் ஜாஸ்மின்ஜேக்கப், விழாவை துவக்கி வைத்தனர். மேல்நிலை மற்றும்எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தனிபாடப்பிரிவுகளில் சதம் எடுத்தவர்கள் என, 87 மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பொதுத்தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த 44 ஆசிரியர்களுக்கு, ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி இசைக்குழுவின் இறைவணக்க பாடல், மழலை செல்வங்களின் நடனம், குழு நடனம், நாட்டிய நாடகம், மவுனமொழி நாடகம், நாட்டுப்புற பாடல்கள் என, கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தினர். மாணவர்களின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர். மாணவி யாஷ்னா நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ஜவஹர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
15-Aug-2025